ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

எத்தனை எத்தனை இன்பங்கள்

பிறைநிலவு ஒளிரும்
குளிர்மாலை பொழுது..
கூடுதிரும்பும் பறவைகளின்
குலாவல் ஒலி..
மெல்லத் தாலாட்டும்
இளவேனில் பூ மரங்கள்...
உருண்டு உலகு காட்டும்
புல் நுனியின் பனித்துளி..
அன்போடு அடிமுட்டி
பால்குடிக்கும் இளங்கன்று...
சிவந்த பழமாகி மேற்கு
விழும் சூரியன்....
பூப்போன்று தூரலிடும்
கார்மேகக் கூட்டம்...
மொட்டவிழ்த்து மணம்வீசி
மயக்கும் மல்லிகை..
கள்ளமிலா சிரிப்புடனே
துள்ளிவரும் மழலை...
வணங்கி பணிவுகாட்டும்
முற்றிய நெற்கதிர்...
சலசலத்து குதித்துவரும்
பாறையிடை நீரோடை...
சந்தோசக் கூச்சலோடு
பாய்ந்துவிழும் அருவி..

எத்தனை எத்தனை இன்பங்கள்
நம்மைச்சுற்றி....
பார்வையிலே பழுதுகொண்டு
சலிப்பான வாழ்க்கை ஏனோ?

ரசிக்க மனம் கொண்டால்
பார்வையில் மற்றம்வந்தால்
ஒவ்வொரு துளியும் இனிமை...

கருத்துகள் இல்லை: