உதிர்ந்த ஒற்றைச்
சிறகாய்
என் மனதில் இருந்து
விழுகிறது எண்ணம்...
மெல்ல தவழ்ந்து
காற்றை சிறகாக்கி
காலவெளியில் பறக்க
எண்ணத்தின் கனம்
கூடிக்கொண்டே...
தடையில்லா வானத்தில்
அதிர்வலையாய் பரவ..
நினைவுச்சங்கிலி மெல்ல
கட்டி இழுக்க..
ஆதங்கத்தோடு இறங்கி
இடம் தேடி அலைகிறது
குறுகிவிட்ட பூமியில்..
சிறகாய்
என் மனதில் இருந்து
விழுகிறது எண்ணம்...
மெல்ல தவழ்ந்து
காற்றை சிறகாக்கி
காலவெளியில் பறக்க
எண்ணத்தின் கனம்
கூடிக்கொண்டே...
தடையில்லா வானத்தில்
அதிர்வலையாய் பரவ..
நினைவுச்சங்கிலி மெல்ல
கட்டி இழுக்க..
ஆதங்கத்தோடு இறங்கி
இடம் தேடி அலைகிறது
குறுகிவிட்ட பூமியில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக