செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தந்தையின் நினைவு..




இருபது ஆண்டுகள்..எந்தையே..
எம்மை விட்டுப்பிரிந்து....
புன்னகை முகத்துடன்
கடைசியாய் கண்டேன்..
உம் நெஞ்சை சுட்ட
வேதனைகள் தெரியாமல்...
அந்த புன்னகையே என்னுள்
இன்னும் பூத்துக்குலுங்குகிறது..
உம் உயிற்ற முகம்பார்க்க
திராணியின்றி விலகி நின்றேன்..
உன் புன்னகை முகம்
என்னில் மறையாமல் இருக்க..
நெஞ்சம் புண்ணாகி வருத்தங்கள்
உம்மை சுட்டபோதும்...
அதன் நிழலும் எம்மீது
படாமல் காத்தவரல்லவா நீர்..
தீ வார்த்தை கொட்டி
பார்த்ததில்லை – என்
நம்பிக்கை வழிகாட்டியாக மட்டுமே
மனதில் உம் உருவம்...
அடித்து எதையும் சொன்னதில்லை..
அன்பால் அணைத்து அல்லவா தந்தீர்..
நீவிர் எனக்கு அருளிய நற்சொத்தே...
நல்லவனாய் இருப்பதும்,
நம்பிக்கையாய் இருப்பதும்
நாலுபேருக்கு உதவியாய் இருப்பதும்..
கடுஞ்சொல் இன்றி
புன்னகையால் கடந்து போவதும்..
உமது ஆசைகள் தீர்க்க
என்னால் முடியாமல் போனது
அந்த கொடுங்காலனால்...
உமது எண்ணங்களை என்னால்
முடித்தவரை பின்பற்ற முயல்கிறேன்..
அப்பா... நீங்கள் எங்களை விட்டு
கடந்து போனாலும்..
சிரித்த உம்முகம் நினைவில்
என்றும் நிலைத்து இருக்கும்...
எதையும் கடந்துவிடலாம் என்ற
நம்பிக்கை என் நெஞ்சில்
நிலைத்து இருக்கும்.....
உலகு தேடும் செல்வமோ,
அதன் பகட்டோ.. என்றும்
நிலையில்லை – உதவும்
உள்ளமே என்றும் நிலைக்கும்...
ஏதுமில்லை என்று சிலர்
எள்ளினாலும்.. உன் மகனாய்
இங்கு வாழ்வதற்கு
பெருமையுடன் உவகை கொள்கிறேன்..
கண்ணீர் கண்ணில் திரையிட்டாலும்
கலங்கும் நெஞ்சம் கர்வம் கொள்கிறது..
நான்... ...நீதிமாணிக்கம் மகனென்று..
-என்றும் உம் நினைவில்..
- சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: