நிஷா, நிர்மல்
இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.திருமண நாளன்று நிஷாவின் அம்மா ரூபாய்
ஆயிரம் பணம் போட்டு ஒரு பேங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து பாஸ்புக்கை பரிசாக
கொடுத்தார்கள்.கொடுத்துவிட்டு நீ எப்பொழுதெல்லம் மகிழ்ச்சியாக இருக்கிறாயோ
அப்போதெல்லாம் பணம் உன் அக்கவுண்டில் டெபாசிட் செய்து விடு என்று சொன்னார்கள். இந்த
செய்தியை நிர்மலிடம் தெரிவித்தாள் நிஷா. நிர்மலும்
ஒப்புக்கொண்டான்.
அடுத்த டெப்பாசிட் செய்ய இருவரும்
காத்திருந்தார்கள்.
நிர்மலின் பிறந்த நாள் வந்தது,ரூ.100
நிஷாவின் சம்பள உயர்வு - ரூ.500
இருவரும் சுற்றுலா சென்றார்கள் -ரூ.200
நிஷா தாய்மை அடைந்தாள்- ரூ.2000
நிர்மலின் ப்ரமோஷந் ரூ.1000
இப்படி பல சந்தோசமான நேரங்களீல் அவர்கள்
டெப்பாசிட் செய்து மகிழ்ந்தார்கள்.
சில,பல
வருடங்கள் கழிந்தன. சண்டை,சச்சரவு,வாக்குவாதம் என்று வாழ்க்கை கசந்தது. நிஷா தன் அம்மவிடம் இருவருக்கும்
ஒத்து வராது பிரியப்போகிரோம் என்றாள். அதற்கு அவள்
அம்மா வெட்டிங் பாஸ்புக்கில் உள்ள பணம் எல்லாம்
எடுத்து இருவரும் செலவழித்துவிடுங்கள் அப்புறம்
பிரியலாம் என்றார்கள்.
நிஷாவும் பணம் எடுக்க பேங்க் சென்றாள்.
வரிசையில் நிற்கும் போது பாஸ் புக்கை சரிபார்த்தாள். சந்தோசமான மனம்
மாறினாள். வீட்டிற்கு திரும்பினாள். வந்து நிர்மலிடம் பாஸ் புக்கை கொடுத்து செலவு
செய்யும்படி சொன்னாள். நிர்மலும் பேங்க் சென்று திரும்பி வந்தான். பாஸ் புக்கை நிஷாவிடம் திரும்பி கொடுத்தான்.ரூ.5000 டெப்பாசிட் செய்து பாஸ் புக்கை கொடுத்தான். நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக
வாழ்ந்திருக்கிறோம் என்று நினைத்து மனம் மாறி இருவரும் மனம் ஒத்து
வாழத் தொடங்கினார்கள்.
பணம் என்பது பெரிதல்ல. ஆனால் பழைய நினைவுகளி
அசைபோட இது ஒரு காரணமாக இருந்தது.
நாம் எப்போதாவது பிரச்சனயினால் கீழே விழ
நேர்ந்தால் அதனை சரி படுத்த பார்க்கவேண்டும்,தப்பிக்க
முயலக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக