ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருநங்கையர்


பெண்ணுமின்றி ஆணுமின்றி
இடைநிலையில் தவிக்கின்ற
மெல்லினமே....
பாசமில்லா உலகத்தில்
பரிதவித்து நிற்கின்றாய்..
நேசத்தை தேடி நீ செல்ல
நிந்தைகள் வருகின்றன..
உயிரியலின் கூறு ஒன்று
உருவற்று போனதாலே
சக்தியாகி மனம் கொண்டு
சிவமாகி உடல் கொண்டு
திசையில்லா உயிராகி
திக்கற்று நிற்கின்றாய்
மணமில்லா மலரென்று
தள்ளுகின்றார்- நல்ல
மனமில்லா மாந்தரெல்லாம்..
வழியின்றி தவிக்கும் நீங்கள்
குற்றமில்லா தெய்வமலர்
சுற்றமில்லா தனிமலர்
ஆணுமில்லா பெண்ணுமில்லா
அர்த்தநாரி என வணங்கும் - உலகு
உயிராகி முன் நிற்க
வார்த்தையாலும் செய்கையாலும்
உறுஞ்சுகின்றர் இன்னுயிரை ...
காணவியலா அர்த்தநாரி கடவுளென
வணங்கும்போது...
கண்முன்னே முன்னிற்க புரியாது
ஜடமாகி தள்ளுவது யார் தவறோ???

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

சங்கர் நீதிமாணிக்கம் சொன்னது…

தங்களின் வருகைக்கும், இடுகைக்கும் மிக்க நன்றி நண்பரே.. போட்டியில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்..