17/08/2015
ஆற்றுப்படுத்தா
துயரத்தோடே
என் பயணம்
நீள்கிறது...
அணைகட்டி
வீழ்ந்துவிடாமல்
அடைபட்டுள்ளது
என் கண்ணீர்..
துயரங்களின்
எல்லை
நீண்டுகொண்டே
இருக்க
தனிமையில்
நடப்பதாய் ஒரு மயக்கம்..
அனைத்தும் இருக்கிறது...
அனைவரும்
இருக்கிறார்கள..
எல்லாமே
அந்நியமாய்...
குறைகூற
ஒன்றுமில்லை..
வெளியில்
தெரியும் வெளிச்சத்திற்காக
உள்ளுக்குள்
எப்படி எரிகிறார்களோ...?
நானறியேன்...
களைப்பின்றி
என் பயணம்
தொடர்கிறது...
களிப்புகள்
வரும் என்ற
நம்பிக்கை
குறையாது...
தவறுகளை
திருத்திக்கொள்கிறேன்
என்
நம்பிக்கைகளையோ
நம்பிக்கை பார்வையையோ
விடுவதாய்
இல்லை..
விடியல்
இல்லாமல் போகப்போவதில்லை
எல்லோருக்கும்..
எனக்கும் கூட..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக