வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிந்தனை செய் மனமே


ஓயாது பேசிக் கொண்டிருப்பவன்
தன் உள்ளத்தில் ஒன்றுமில்லையென்பதைத் காட்டிக் கொள்கிறான்.
`
ஒன்றுமே பேசாதிருப்பவன்
தன்னுள்ளத்தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டி விடுகிறான்.
`
முன்னவனை ஓட்டைவாயன் என்றும்; பின்னவனை அறிஞன் என்றும் கூறுகிறவன் தன் அவசரப் புத்தியைக் காட்டிக் கொள்ளுகிறான்.
`
முன்னவனை நல்லவன் என்றும் பின்னவனை வஞ்சகன் என்றும் கூறுகிறவன் அவனைவிட அவரசக்காரன் என்பதைக் காட்டிக் கொள்ளுகிறான்.
`
இந்நால்வரும் சிந்தனைச், செல்வத்தை இழந்து விட்டவர் என்பது அறிஞரின் & சான்றோர்களின் முடிவு.

வைரத்துளிகள்
******************
* பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்.
வாய் மூடி இருப்பதுஅல்ல்

* செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே

* பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும்.

பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சமபாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

கருத்துகள் இல்லை: