படித்ததில் பிடித்தது
1.
நீ யாரை
வேண்டுமானாலும் சந்தேகி. ஆனால்
உன்னையேயல்ல.
2.
வாய்ப்பு ஏற்படும்
போது உடனடியாக நல்லது செய்து விடுங்கள்.
3.
மகிழ்சியைப் போல் ஒரு
அழகு சாதனம் அழகிற்கு வேறெதுவுமில்லை.
4.
வாழ்கையின்
ஏற்றத்தாழ்வுகளை நிதானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும்.
5.
சுத்தம் உண்மையாக
தெய்வீகத்திற்கு அடுத்தபடியானது.
6.
வாழ்கையின்
மிகப்பெரிய இலட்சியம் அறிவல்ல செயல்தான்.
7.
தன்னையே தேடும்
முடிவில்லாத போக்கே வாழ்க்கை.
8.
அன்பான சொல்
மருந்தாகவுமிறிக்கிறது.வாழ்த்தவும் செய்கிறது.
9.
மென்மையான சொல்
இரும்பு வாசலைத் திறக்கிறது.
10.
திருப்தி மாதிரிப்
பொக்கிஷம் வேறெதுவும் கிடையாது.
அரேபியா நாட்டுப் பழமொழிகள் - படித்தது
அதிர்ஷ்டம் உள்ளவனை நைல் நதியில்
தள்ளினாலும்
அவன் தன்னடைய வாயில் ஒரு மீனோடு வெளி
வருவான்.
எனக்கு செருப்புக்கள் இல்லை என்று
முணுமுணுத்தேன்
பாதங்களே இல்லாத நம்பிக்கையுள்ள மனிதனைச்
சந்திக்கும்வரை.
தன் மனைவியை மதிக்காதவன்
தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
தகுதிக்கு மீறி செலவு செய்பவன்
தன் உயிரை முடித்துக்கொள்ள கயிறு
திரிக்கிறான்.
ஓநாய்க்கு கருணை காட்டுவோர்
மறைமுகமாக ஆட்டுக்குட்டிக்கு தீங்கு
செய்கிறார்கள்.
தாயின் செல்லக் குழந்தைகள்
இறுதியில் வெண்ணெய் வெட்டும் வீரராகவே
இருப்பர்.
அறிவைத் தேடும் ஒருவருக்கு
தேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக்
கொடுக்கின்றன.
நண்பர்களைப் பற்றி நல்லது பேசு
விரோதிகளைப் பற்றி எதுவும் பேசாதே.
குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,
கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில்
வாழாதே.
பணம் பற்றிய பழமொழிகள்: - படித்ததில்
ரசித்தது
*பணத்தின் உண்மையான மதிப்பு கடன் கேட்கும்
பொழுது தான் தெரியும்.
* பணக்காரன் ஆவதற்கு பணத்தை குவிக்க
வேண்டியதில்லை, தேவைகளை குறைத்தாலே போதும்.
* நண்பனுக்கு கடன் கொடுத்தால் நண்பனும்
போய்விடுவான் கடனும் போய்விடும்..
* பணம் பத்தும் செய்யும்.
* பணம் பந்தியிலே, குணம்
குப்பையிலே
சில சிந்தனைகள்
* நம்பிக்கையோடு வாழுங்கள்.
* நியாயமான தவறுகளை மறந்துவிடுங்கள்.
* வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும்;
பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
* என்னுடைய நம்பிக்கை என்னும் ஊற்று காயாமல்
இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன்.
* முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் ஒரு
தவறை இன்னொரு தவறால் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.
* எதிரியாக இருந்தாலும் பசி தீருங்கள்.
* விழலாம், எழாமல்
இருக்கக் கூடாது.
`
`
நன்றி: 'வெற்றியை
வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக