வியாழன், 6 ஆகஸ்ட், 2015

அக்னி புத்திரன்

அக்னி புத்திரன்
***********************
எங்கள் வானில் விடிவெள்ளியாய்
வந்த அக்னி புத்திரனே..
எங்கு பிறந்தாலும்
எங்கு படித்தாலும்
எண்ணத்தில் ஏற்றம் கொண்டால்
நம் ஏற்றத்திற்கு தடையில்லை
நிரூபித்தவர் நீரல்லவோ...

சாதாரணனாய் பிறந்தாய் இம்மண்ணில்
மாமணியே...
சாதிக்கப் பிறந்தவரே..
சாதனையின் சிகரமே...
எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும்
சிகரம் தொடலாம் என்று
செய்து காட்டி எங்கள்
இளைஞர்களை தூங்காமல்
செய்தவர் நீர்..

தாய்மொழியில் படிப்பதனால்
சிந்தனைக்கு தடையில்லை..
ஏறு நடைபோட வீறுகொண்டு எழ
ஏது தடை என்று வாழ்த்து காட்டினீர்..
அறிவியலில் சாதித்தாய்
ஆனாலும் எழைகளுக்காய் யோசித்தாய்..

கனவு காணுங்கள் இலக்கினை எட்டும் வரை
ஓயாமல் உழையுங்கள் என்று மாணவர்களை
தேடித்தேடி சென்று சொன்னவரே..
அந்த மாணவர்களின் முன்னிலையில்
பேச்சினிலே காலன் உம்மை
கூப்பிட்டதேனோ???

புன்னைகையால் எம்மனதை
கொள்ளைகொண்ட நல்லவரே...
மதம் தாண்டி... மொழி தாண்டி
மனிதத்தை சொன்னவரே..

எங்கே சென்றாலும் நீவிர்
தாய்மொழியாம் தமிழை
நெஞ்சோடு அணைத்துக்கொண்டு
கண்ணோடு காத்துக்கொண்டீர்

அய்யா..எட்டா உயரமெல்லாம்
நீவிர் எட்டாமலே இறங்கி வந்ததே
புகழ் மாலை எல்லாமே...
உங்கள் காலடியில் தேடி வந்ததே
கிட்டாத மாமணியே..
நீவிர் எட்டாத இடம் சென்றீர்..

திண்டாடும் எம் உள்ளம்
நீங்காத வலிகொண்டே..
அழியாத புகழ் ஒளியில்
அய்யா நீர் சென்றுவிட்டீர்

அக்னிச்சிறகுகள் தந்த
அய்யா கலாம் அவர்களே..

தூக்கத்தில் காண்பதல்ல கனவு..
நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு..
எங்கள் இளைஞர்களை தட்டிக்கொடுத்து
கனவு காண செய்த ஏவுகணை நாயகனே..

நல்லரசு கிடைக்காத என்று
நாடே ஏங்கி இருக்க..
நீவிர் எங்களை வல்லரசு கனவு செய்த வல்லவரே...

நல்ல தலைவனாய் நீ பிரிந்தாய்
இந்த நாடே அல்லவே கண்ணீர் சிந்துகிறது..

அய்யா.. நீவிர் விதையாய் விழுந்து விட்டீர்..
நாங்கள் வீறுகொண்டு வளருவோம்..
வல்லரசு இந்தியா என்ற
உலகத்தின் வார்த்தைகள்
உங்கள் செவியடையும் வரை ஓயோம்..

எங்களின் கண்ணீர் இன்று மட்டும் சிந்தட்டும்..
உங்கள் பாதங்களை கழுவ..
ஆனால் என்றும் நிற்காது

நீங்கள் தந்த கனவு மந்திரம்..

கருத்துகள் இல்லை: