4 வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப்
பார்க்கவே முடியாது."
6---"அவருக்கு எல்லா
விஷயமும் அத்துபடி"
10---"தங்கமானவர்.ஆனால்
பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும். மிட்டாய் தின்னதுக்காக என்னை
அடிச்சிட்டாரு."
12---"நான் சின்னப்பிள்ளையா
இருந்தபோது, என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு
14--"அவருக்கு சீக்கிரம்
திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது எடுக்கணும்பாரு.99மார்க்
எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'
16---என்னைச் சுத்தி என்ன
நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு. பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."
18---"எடுத்தேன்
கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."
20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல. அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"
25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான். இவரெல்லாம் ஒரு மனுஷனா?"
30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு. என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?"
40--"என்னை எங்கப்பா
எவ்வளவு ஒழுக்கத்தோட, கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா?
அதனால்தான்,இந்தளவு
நல்லா இருக்கேன்."
45--"எங்கப்பாவை
நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."
50--"ஒருத்தனை
மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று
பேரு. ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும்
கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா. அவர் கிரேட்."
55--"ஒவ்வொரு விஷயத்தையும்
திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச ஆளே இல்லை."
60---"எங்கப்பா போல ஒரு ஆளை
பார்க்கவே முடியாது."
(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை
உணர்வதற்குள்
56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக