1. நண்பனை கஷ்ட காலத்திலும் வீரனை
போர்க்களத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
2. உழைப்பின் வேர்கள் கசப்பு. அதன் கனிகள்
இனிப்பு.
3. எல்லோரும் தீர்க்க வேண்டிய கடன் ஒன்று
உள்ளது.அது தான் மரணம்.
4. முயற்சி இல்லாமல் வாழும் வாழ்வு, துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.
5. பச்சை குழந்தைகளின் கேள்விக்கு, மகா அறிவாளி கூட பதில் கூற முடியாது.
6. தாமே பெற்றோர்களாக மாறும் வரை, பெற்றோர்களின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாது.
7. கடனோடு காலையில் எழுவதை விட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக