உண்மைக்கு விலையா?
வியப்போடு தான் தேடினேன்..
என்ன விலை இருக்கும் என்று..
நேர்கொண்ட பார்வையிலே
கேட்டிடும் கேள்வியிலே
உணர்ந்திட்ட வேளையிலே
உண்மைக்கு விலை நேர்மை..
பார்வைகள் தாழ்த்திக்கொண்டு
பயத்திலே வார்த்தை மாறி
நடுக்கத்தில் சொல்லுகையில்
உண்மைக்கு விலை உயிர்பயம்..
வள்ளுவனும் சொல்லி சென்றான்
“பொய்மையும் வாய்மையிடத்து
புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்”
எனில் வாய்மை பொய்மையாவதும் கூடுதே..
ஆனாலும்
சீரழிந்து புறங்கூறும் மனிதர்கள்
உலவுகின்ற உலகினிலே
பொய்யில் தானே அடங்கிவிட்டது
உண்மையும்
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக