செவ்வாய், 3 ஜனவரி, 2017

சொல்லப்படாத கவிதை..

இது என் நாட்காட்டியில்
இருந்து வரும் சொல்லப்படாத கவிதை..
யோசிக்க யோசிக்க
எதுவுமே மனதில் தோன்றவில்லை..
உன்னைத்தவிர..
நான் நேசிக்கும் என்னுயிரே..
நேரில் முகம் பார்க்காமல் நாள் போக மறுக்கிறது..
பேசும் மொழி கேட்க என் செவியும் துடிக்கிறது..
வெட்கத்தினால் சிவக்கும் உன் முகம் பார்க்கையிலே..
செக்கச்சிவந்த அந்தி மாலை சூரியனே நினைவுக்கு..
உன் செங்கோவை இதழினிலே
சிறுகவிதை எழுத வேண்டி நான் கேட்ட யாசகம்
உன் நினைவில் உள்ளதா?
என் கண்விழியின் ஒளியே..
என் கவிதைகளின் உருவே..
செங்கமல மலர் முகத்தின்
சிறுநகையின் நறும்பொருளே..
இன்கவிதை இதழ்கவிதை
எழுத இன்னும் என்ன தயக்கம்
ஓடோடி நான் வருவேன்
உனைக்கான அனுதினமும்
பாராமல் இருக்காதே..
பதில் சொல்ல மறுக்காதே..
காலங்கள் மாறினாலும்
காதல் என்றும் மாறிடாது
கவிதை சொல்ல நானிருப்பேன்
கனவெல்லாம் வந்திடுவாய்..

சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: