திங்கள், 28 மார்ச், 2016

இது மட்டும் வேண்டாமே!



திட்டமிடாத பெரும்பயணத்தின்
பாதைகள் தீர்மானிக்கப்படாத சுமைகளாக..
பாதை தவறென்றால் திசை மாற்றலாம்
மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கு திரும்பி
பயணம் தொடரலாம்..
தவறோன்றில் தொடராமல்..
ஆரம்பம் திரும்பாமல்
நமது பாதையை செப்பனிட்டும் முன்னேறலாம்..

வாழ்க்கை என்பது தனித்து நிற்கும்
பனையல்ல..
வேரோடு வீழ்த்து விட..
விழுதுகள் தாங்க பரந்துநிற்கும்
ஆலமரம்..

அனைத்துக்கொள்வோம்...
வாழ்வின் புரிதலை,
வாழ்க்கையின் மகத்துவத்தை
வாழ்தலின் இனிமையை

அண்ட சராசரத்தின் பால்வெளியில்
கண்ணுக்கு தெரியாத சிறு தூசு..
நமது மண்..
அதிலே வாழ்வென்பது
மின்னி மறையும் மழைக்கால
ஒளிமின்னல்..

நேசத்தை தொலைத்து
தேடும் நிம்மதியும், அமைதியும்.
அன்பை மறந்து எதற்கு
போட்டியும், பொறாமையும்
இது மட்டும் வேண்டாமே! 

கருத்துகள் இல்லை: