செவ்வாய், 22 மார்ச், 2016

** நீரைத் தேடி **



வாழ்வெனும் கடலில்
நான் அன்பெனும்
நீரைத் தேடி
அலைகிறேன்..

அதுவோ சிலநேரங்களில்
கானல் நீராய் சாபத்தில்
என்னைத்தள்ளி
தாகத்தில் தவிக்கவிடுகிறது..

நான் கற்பூரமாய் காற்றில்
கரைய யத்தனித்த போது
பேரலையாய் வந்து
என்னை களவாடியது..

அன்புக்காக அலைபாய்ந்த போது
என்னை மெல்ல வந்து
சாரல் நீராய் தழுவியது..

பசித்திருந்த வேளையிலே
படைத்திடும் அருசுவையிலே
முகிழ்த்திடும் உமிழ்நீராய் சுவைத்து..

துயரத்தில் வீழ்ந்திருக்க
காதலெனும் பூத்தொடுத்து
மடிதனிலே தாலாட்டு
ஆனந்த கண்ணீராய் ஆட்கொண்டது..

கருத்துகள் இல்லை: