முடியாத
நெடும்பயணமாய் தொடர்கிறது
நம் யாத்திரை..
கருவறையில் சிறு
புள்ளியாய்
உயிர் துளைத்து மெல்ல
தொடங்கிய யாத்திரை..
சிறுபிறையாய் வளரும்
வானத்து நிலவுபோல
தொடர்ந்த யாத்திரை..
காடுமலை தாண்டி
தடைகளை உடைத்து..
சிற்பல தடைகளில்
வளைந்து..
மெல்ல தவழ்ந்துவரும்
நதியாய் வந்த
யாத்திரை..
மலர்மதுவில் மயங்கிய
பூநக்கி போல்மயங்கி
அன்பின் அகழியில்
ஆட்பட்ட
சிற்றுயிராய் சுழன்று...
சிற்றிரும்பில்
சிறைபட்ட
பாசக்களிறாய்.
பரிதவித்து
தொடரும் யாத்திரை..
பாகினில் மூழ்கித்
தத்தாளிக்கும்
சிறுஎரும்பாய் இங்கே
காதலில் மூழ்கி
காமத்தில் விழுந்து
கண்டெடுத்த
முத்துக்களோடு
கரையேற முடியாது
தத்தளிப்பில்
தவிக்கும் யாத்திரை..
வந்தவழி அறிந்தோம்....
வாழும்வழி கண்டோம்....
அன்புவழி மறந்தோம்.....
அவதியிலே
வாழ்கின்றோம்.
செல்லும்வழி
சொல்லுவது
ஓங்கார ஒலியாகும்..
ஆங்காரம் விட்டு
நாமும்
அமைதியாய் தொடர்வோம்
நாம் அகிலத்தின்
யாத்திரையை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக