வெள்ளி, 25 மார்ச், 2016

உறுதி

மனதிருக்கு..
மனதில் உறுதியிருக்கு.
உயிரிருக்கு..
உயிரில் உணர்விருக்கு
காலென்ன போனாலென்ன..
காலனே வந்தாலென்ன

“கையிருக்கு
தன்னம்பிக்கை இருக்கு..
உதட்டில் புன்னகை இருக்கு..
உள்ளத்தில் நம்பிக்கை இருக்கு..

அறிவியலின் துணையிருக்க
அறிந்தவரின் துணையிருக்க
உள்ளத்திலே துணிவிருக்க
காலென்ன போனாலென்ன..
காலனே வந்தாலென்ன....

கருத்துகள் இல்லை: