சனி, 19 மார்ச், 2016

அர்த்தநாரி வாரிசுகள்..

மீட்டப்படாத வீணையில்
மீட்கப்படாது கிடக்கும் ராகங்கள்... ..
சொல்லொன்னா துயரத்தில்
சொல்லபடாத வார்த்தை நாங்கள்
அழகான பூஞ்சோலையில்
பூக்காத பூக்கள் நாங்கள்..
ஓளிவீசும் வெளிச்சத்தில்
நிழல் உருவம் நாங்கள்..
இசைக்காத ராகத்தை மெல்ல
பாடிடும் பறவைகள் நாங்கள்...
கடவுள் வரைந்திட்ட ஓவியத்தில்
மணமில்லா மலர் நாங்கள்..
உயிரிருந்தும் ஒரு உயிர் கொடுக்கும்
உயிரில்லா உடல் நாங்கள்..
வார்த்தைகள் கனலாய் பொசுக்கினாலும்
வாழத்துடிக்கும் இருமன உள்ளங்கள்..
எங்களுக்கும் உரிமையுண்டு
நாங்களும் கடவுளின்
கனவுப் படைப்புகளே..
அர்த்தங்களை சொல்லி ஒரு
அர்த்தநாரியாய் இருபவனும்

ஒரு அர்த்தத்தை வழங்கிடுவான்...
ஏனோ போராட்ட வாழ்க்கையிலே
வாழ்ந்திடத்தான் நினைக்கின்றோம் ..
ஆனாலும் மனம் விரும்பவில்லை
உயிருடன் இருப்பதை..!

கருத்துகள் இல்லை: