சினேகிதனே சினேகிதனே
ரகசிய சினேகிதனே
ரகசிய சினேகிதனே
சின்ன சின்னதாய்
கோரிக்கைகள்
செவி கொடு சினேகிதனே
உந்தன் பார்வை
அணைக்கும்..
உந்தன் அன்பு
இனிக்கும்..
நெஞ்சம் பேசும்
வார்த்தைகள்
என்றும் தொடருமடா..
சொல்லிச்செல்லும்
உந்தன் வார்த்தை கவரும்..
உன் சிரிப்பொலி
எந்தன் உயிர் கிளரும்..
உன்னிதழ் மொழி
சுவைக்கும்..
காத்திருக்கும் நேரம்
தன்னில் கறைவேன்..
நீ பார்த்திருக்க
நானும் கொஞ்சம் உறைவேன்..
உள்ளத்திலே
மகிழ்வேன்..
கூந்தலை நுகர்ந்து
விரல்கோலம் போட்டு..
உன்னுயிர்
கலந்திடுவேன்..
நேரத்தை நிறுத்தி
உன்துயர் துரத்தி
என்னுயிர்
பிழைத்திடுவேன்..
எண்ணங்களை உன்னுடனே பகிர்வேன்..
வண்ணங்களை கலந்து
வானவில்
வரைந்து உனக்கென நான்
தருவேன்..
உன்வார்த்தைகள்
கோர்த்து...
வரிகளாய் சேர்ந்து....
உனக்கென பாடிடுவேன்..
தினம் எழும்போது உன்முகம்
பார்த்து..
உள்ளுக்குள்ளே
நனைந்து கொள்வேன்..
நீவரும் பாதை
நினைவுகள் விதைத்து
என் காதலை வளர்த்து
வைப்பேன்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக