அன்பாய் இரு..
ஆதரவாய் இரு..
உண்மையாய் இரு
எல்லோரையும் அணைத்து
அனுசரித்து இரு..
பணத்தின் பின்
செல்லாது
பண்பாய் இரு.
சுயநலம் தவிர்த்து
பிறர்க்கு
உதவியாய் இரு...
என் உள்ளத்தில்
நேரிடையாய்
போதிக்காமல்
மற்றவர்களிடம் என்னை
உயர்த்தி
என் உள்ளத்தை
செதுக்கி
இன்று உலகத்தோடு
ஒட்டாத ஒருயிராய்...
என்னை தனிமையில்
விட்டுச்சென்றயே..
அப்பா..
தவிக்கிறேன் நான்..
சூதும் தெரியவில்லை
சூழ்ச்சியும்
தெரிவில்லை..
ஏய்ப்பதும்
அறியவில்லை..
நல்லது என்ற
கண்கொண்டு
நரிகளையும்
அறியவில்லை..
எண்ணத்தில் நல்லது
கொண்டு
எடுத்தது எல்லாம்
வீழ்ச்சி என்றால்
எவ்வளவு தான்
தாங்கும் உள்ளம்...
ஒருவேளை..
கள்ளத்தை
அறிந்திருந்தால்
கலங்கியிருக்க
மாட்டேனோ..
ஏமாற்ற
தெரிந்திருந்தால்
இதை எழுதியிருக்க
மாட்டேனோ..
இன்னும்
எத்தனைக்காலம்
இந்த வேதனைகள்
உள்ளத்தில்..
கலக்கம் வருகையிலே
கலங்குது
என் கண்கள் அப்பா..
கண்ணீர் வரிகளை தான்
இன்னும் கட்டிக்கொண்டு
வருகிறேன்...
அமைதியின் வாழ்வினிலே
அன்பின் வரிகளை என்று
அறுவடை செய்வேனோ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக