வியாழன், 10 மார்ச், 2016

தூரிகை ஓவியம்..

காற்றில் மிதப்பேனோ..
அந்த மேகத்தை தொடுவேனோ..
மோகத்தை வென்றுவிட்டு
இந்த மண்ணில் வாழ்வேனோ..

மலர்ந்திடும் மென்மலரின்
உயிர் தீண்டலிலே
மது மயக்கத்தில் விடுபடும்
பொன்வண்டினை போலின்றி
கண்களின்  வார்த்தைகளின்
பஞ்சு மேகத்தில் மிதப்பேனோ..

தோன்றிடும் நினைவுகளோ..
வெறும் தோரணை வார்த்தைகளோ..
எப்படி இருந்தாலும்
காதல் செப்படி வித்தையல்ல..

கைவரை ஓவியமோ..
கைவந்த ஓவியமோ..
வானில் மிதந்த மோகம் இன்று
தூரிகை முனையில் துயிலுற களிக்கின்றேன்..

கருத்துகள் இல்லை: