சிலந்தியாக வலைப்பின்னி
நம் வாழ்க்கை காத்த
பெண்ணினம் தான்
வலைக்குள்ளே
சிக்கிக்கொண்டு
தேய்ந்து வளரும்
பிறைநிலவாய்
இன்னும் தவிக்கிறது....
எண்ணங்கள் ஏற்றம் பெற
உரிமைக்கு வாழ்வு
கிடைக்க..
வீறுள்ள விதையாகி
மெல்ல பூமி பிளந்து
புதுக்காற்று சுவாசிக்கவும்
வெளிவுலகம் காணவும்
போராட்டம பல கண்டு
பூத்ததே ஒரு நாளில்..
ஏனோ...
வலைகளின் இறுக்கம்
அந்த
பட்டாம்பூச்சிகளில் மென்மை
சிறகுகளை கட்டி இழுக்கும்
அவைகள்
உறவென்று ஒருபக்கம்
உற்றமென்று ஒருபக்கம்
மொய்த்திடும் காம
குரோத
பேய் பார்வைகள்
ஒருபக்கம்..
என்ன செய்வாய், எது
செய்வாய்..
என ஏளனத்தின் பார்வை
ஒருபக்கம்..
வென்றெடுத்தோர்
உண்டெனினும்..
வலை சிக்கலுக்குள்
தனையிருத்தி
சுகம்காணும் பெண்கள் இங்கே
தியாக பூக்களாய்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக