நீ இல்லாத உலகத்திலே
யார் தான்
இருப்பார்..
தன்னை பற்றி
அறியாதவரும்
உன்னைப்பற்றி அறியாது
நொடியும் உன்னை
விட்டு பிரியார்..
கண்ணுக்கு
தெரிவதில்லை..
ஆனால் நீ உயிராய்...
உணர்ந்து உன்னை
அறியலாம்
உணர்சியாய்...
பேச்சியில் உன்னை
சொல்லலாம்
வார்த்தையாய்...
உன் ராகத்தில்
தலையாட்டும்
வாழும் மரங்கள்..
உன்னில் மிதந்த வரும்
இயற்கையின் இசைகள்..
நீ பிரிய இங்கு யார்
வாழ்வார்..
உயிரோடு உயிராய்
வாழ்கிறாய்..
உன்னை காற்றென்பதா..
உயிர் மூச்சென்பதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக