திங்கள், 14 மார்ச், 2016

தனித்திரு..


காலப்பெருவெளி எல்லாம்
மின்னிக்கிடக்கும் நட்சத்திரங்களில்
தனித்திருக்கும் சூரியனாய்..

உயர்ந்து நிற்கின்ற
மலைகளின் நடுவில்
தனித்திருக்கும் சிகரமாய்..

பரந்திருக்கும் பாலையில்
குளிர்ந்து செழித்த்து
தனித்திருக்கும் சோலையாய்...

கூடிநிற்கும் கூட்டத்தின்
கண்கள் மொய்க்க
தனித்திருக்கும் சிறப்புற வேண்டும்..


கருத்துகள் இல்லை: