புதன், 9 மார்ச், 2016

தேடலின் பசி..


பூவை தேடித்தேடி
மதுஅருந்தும் தேனியாய்
தேடித்தேடி படித்தேன்.. 
கிடைத்த அறிவின் துளிகளை
வானத்து மண்டலத்தில்
வார்த்தைகளாய் தூவி வைத்தேன்..
பூத்துவந்த வார்த்தையெல்லாம்
வரிகளிலே நின்றுவிட..
வார்த்தையின்றி சலனமின்றி
மனது
வெறுமையில் ஆழ்ந்திருக்க..
வெற்றுக்கோப்பையாய் நான்..
தேடல்கள் முடிவதுண்டா?
இருக்காது
தேடல்கள் முடிவிலிகளே..
ஒன்றின் தேடலின் விடை
மற்றொரு தேடலின் விதையாக...
காலங்கள் ஓடினாலும்..
காற்றில்
என் சுவாசம் கரையும்
நாள்வரை தேடுவேன்..
எல்லையில்லா இந்த உலகில்
வெற்றுக்கோப்பைகள் மிகுதியாய்..
வெற்றிடமாய்..
என்னைப்போல..

கருத்துகள் இல்லை: