என் நினைவுகள் பாடும்
ராகங்களையும்..
நிஜங்கள் சொல்லும்
வேதங்களையும்
சொல்லத்தான்
நினைக்கிறேன்..
கனவுகளில் இன்பங்கள்
காணும்போது
நேசங்களின் பிரிவுகள்
சின்னவ்லி..
உண்மைகள் ஊமையாய்
உறங்கும்போது
உணர்வுகள்
வார்த்தையில் கிழிபடுகிறது..
புரிதல் இல்லாத
பாதையில் பயணம் என்பது
வார்த்தைகள் இல்லாத
மௌனங்கள்
தரும் வேதனையின்
இரைச்சலாய்...
உவகைகளும், துக்கங்களும்
மடிசாயும் நேரங்களில்
பகிர..
புல்லனைக்கும் பனிபோல
சுகமாகிறது..
இதமான வார்த்தைகள் தான்
வலியான
வாழ்க்கையின் இசைப்பாடும்
ராகங்கள்..
அன்பின் அணைப்புகள்
தரும் சுகம்
வெயில்கால மழைத்துளியாய்
மனதில் இன்பவாசம்
வீசும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக