என்
எண்ணங்கள் உன்னைச்சுற்றி
என்
நினைவுகள் உன்னைச்சுற்றி..
என்
கனவுகள் உன்னைச்சுற்றி...
காற்றோடு
மூச்சாக கலந்து
அனுப்புகிறேன்
என் நினைவுகளை..
மேகத்தோடு நீராய் மோகத்தோடு
அனுப்புகிறான்
என் கனவுகளை...
மலரோடு
வாசம் சேர்த்து
அனுப்புகிறேன்
என் காதலை..
நினைவுகள்
இன்றே கழிகிறது..
கனவுகள்
நாளையை அழைக்கிறது..
உறவுகள்
பூக்கும் வேளை..
உலகமே
மகிழ்ச்சியில் திளைக்கும்..
உன்னின்
ஆசைகள் என்னின்
லட்சியமாய்
உருமாறும்..
உந்தன்
வார்த்தைகள் எல்லாம்
காதில்
தேனாய் பாய்ந்துவரும்..
கனவில்
இருக்கும் விழிகள்
என்னைக்காதலுடன்
நோக்கும்போது
இமயத்தையும்
புரட்டும் பலம்
எந்தன்
மனதில்...
அன்பினால்
வந்த நெருக்கம்..
காதலால்
வந்த கிறக்கம்...
காலத்தில்
கனிந்திடும் இந்த உறவு..
இமயங்கள்
குறுகலாம்..
இதயங்கள்
உடையலாம்..
சூரியனும்
இருளலாம்..
சூழலும்
மாறலாம்..
காதலே..
உந்தன் நினைவு..
காலகாலத்திற்கும்
மாறது நிலைக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக