காற்றில் கரையும்
வாசமாய்
நினைவில் உருகும்
நேசமாய்
என்னில் கலந்த
உயிரே..
நினைவலைகள்
நீந்திச்செல்லும்
வழிகள் எல்லாம்
நீ பூத்திருக்க..
கனவலைகள் மிதந்துசெல்லும்
வானமெல்லாம்
உந்தன் காதல்
வரிகள்..
உணர்வலைகள் கடந்துசெல்லும்
மேகமெல்லாம்
தவழ்ந்து வரும் உன்
புன்னகை..
இந்த ஏகாந்த வெளிகளெல்லாம்
படர்ந்திருக்கும் நம்
அன்பின் கொடிகள்..
யுகங்கள் கடந்தும்
காத்திருந்து
நிதம் மலர்கின்றன
மலர்கள்
அந்த பரிதியை கண்டு..
ஏனோ உன் மதிமுகம் காண
சில கணங்கள்
கடந்தாலும்
வாடுது என் மனது...
கடக்கின்ற எல்லாம்
கடந்தால் என்ன...?
மறைகின்ற எல்லாம்
மறைந்தால் என்ன...?
அழிகின்ற எல்லாம்
அழிந்தால் என்ன...?
பிறக்கின்ற யாரும்
இறந்தால் தான் என்ன....?
வையத்தின் வாழுமட்டும்
என்றும் நம்மை
நினைத்திருக்கும்
நினைவுகள
நிலைத்திருக்க
வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக