எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் ஆகும்
பூவினை தேடும் வண்டாக
நானும் பாக்களில் உனையே தேடுகிறேன்..
சந்தத்தை சொல்லும் மொழியாக
நீயும் வந்ததைப் இங்கே பார்க்கிறேன்..
தேவதை நீதானே
பொய்களை சொல்வதென்ன..
தேன்மொழி நீதானே
எனதுள்ளமும் மாறவில்லை..
கண்மணி நாம் வாழும் காலமும் இதுதானே...
நீயும் காற்றிலே கலக்காதே
என் காதலை மறக்காதே..
நீயில்லா நாள் போல
தேய்ந்திடும் நிலவொருநாள்
நினைவில்லா மனம் போல
காய்ந்திடும் நதியொருநாள்..
கனவுகள் கண்ணோடு..
நினைவுகள் நெஞ்சோடு..
நீயென் உயிரோடு
அல்லால் நானிந்த மண்ணோடு..
என்னுயிர் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் ஆகும்
பூவினை தேடும் வண்டாக
நானும் பாக்களில் உனையே தேடுகிறேன்..
சந்தத்தை சொல்லும் மொழியாக
நீயும் வந்ததைப் இங்கே பார்க்கிறேன்..
தேவதை நீதானே
பொய்களை சொல்வதென்ன..
தேன்மொழி நீதானே
எனதுள்ளமும் மாறவில்லை..
கண்மணி நாம் வாழும் காலமும் இதுதானே...
நீயும் காற்றிலே கலக்காதே
என் காதலை மறக்காதே..
நீயில்லா நாள் போல
தேய்ந்திடும் நிலவொருநாள்
நினைவில்லா மனம் போல
காய்ந்திடும் நதியொருநாள்..
கனவுகள் கண்ணோடு..
நினைவுகள் நெஞ்சோடு..
நீயென் உயிரோடு
அல்லால் நானிந்த மண்ணோடு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக