அது சொர்க்கத்தின் நாட்கள்.....
காதலில் விழுந்து
என்றும்
அவள் நினைவுகளில் வாழ்ந்தது..
கண்களால் பேசிய
வார்த்தையில் குளிர்ந்து
மனம் அவள்
நினைவுகளில் மூழ்கியது...
வார்த்தைகள் இல்லா
மௌன
நேரத்தில்
நெருப்பில் விழுந்த
மலராய் மனம்
வாடி நிற்பேன்..
காணமுடியாத நாட்களில்
நீரில்லா நிலமாக
நெஞ்சத்தில் ஒரு
தவிப்பு..
பிரிவுச்சுவர் விழுந்திடுமோ
என்ற தவிப்பில் துடித்த துடிப்பும்
பொங்கிய கண்ணீரும்..
ஏனோ.. இன்று
அர்த்தமில்லாமல்
போய்விடுமோ என
தவிக்கிறது
என் மனம்...
இந்த இழந்த
சொர்க்கத்தில்..
மௌனமே இனிய
மொழியாய்..
தன்மையே வாழ்வின்
வழியாய்..
வலிகள் இல்லாத
நேரத்தை
தினம் தேடும்
மனது..
இன்றைக்கு வாழ்க்கையோ
விவசாய நிலத்தில் பயிர் செய்வது
போலல்லவா போராட்டத்தை தந்துவிட்டது..
சொர்க்கத்தை மீட்க
தவியாய்
தவிக்கிறது
அந்த அன்புகொண்ட நெஞ்சம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக