பாலைவனத்தில் வதங்கிய
நேரத்தில்
தென்றல் தீண்டியது
போல நீயும்
சுகராகமாய் என்
வழிகளில் வந்தாய்..
சுகமானது பயணம்..
ஆலாபனைகள் இல்லாத
சங்கீதமாய்
இனிமையான பயணத்தில்
...
நடுவே மேகத்தில்
மின்னலென
சிறுகீறல் மனதில்..
புரிதல்களின்
பாதையில் நீ
நெருஞ்சிகளை தூவிவிட.
உன் வார்த்தைகளோ
மனதில் வரிக்கோடுகள்
இழுத்துவிட
தொண்டைக்குழிக்குள்
அடைக்கும் குமிழியாய்
துக்கங்கள் மிதக்க..
இமைதுஞ்சா இரவுகளின்
கண்ணீர்கள்...
ஆறுதலின் மடிதேடும் மனதிற்கு
ஆசைகளில் வரிசையில்
கடையிடம் தந்து
மோகத்துப் பூக்களை
கசக்கி
குமுறும் எரிமலையில்
வீசுகிறாய்...
என் பாடல்களில்
நீலாம்பரியான
ஆனந்த ராகங்களில்
வரிகளை
கொந்திக்கொத்தி
முடிவுகளை
முராரியை
மாற்றுகிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக