எல்லோரும் உன்னை
விரும்பித்தேடினாலும்
எளிதில் நீ கிடைப்பதில்லை..
கொடுத்தால் குறையாத
கல்வியல்ல நீ..
ஏனோ கல்வியே இன்று
உன்னில் உள்ளது..
ஆசை ஆசையாய் சேர்ப்பார்..
ஆசைப்பட்டு நினைத்ததைப்
பெற்றால்
நீ போனது பற்றி
வருந்துவர்..
உழைப்பவர்க்கு அளவோடு
கிடைக்கிறாய்..
ஏய்ப்பவரிடத்தில் எளிதில்
குவிகிறாய்..
உன்னைப் பார்ப்பவர்கள்
பரவசப்படுவர்..
உன்னை இழந்தவர்
துக்கப்படுவார்..
நீ இருந்தாலும்
நிம்மதி கொடுப்பதில்லை..
நீ இல்லாமலும் நிம்மதி கிடைப்பதில்லை..
வெற்றுக்காகிதத்தை
மதிப்புற வைக்கிறாய்..
கசக்கினாலும்
மதிப்பிழக்காமல் நிற்கிறாய்.
எல்லோர்க்கும் கிடைக்காத நீ..
எனக்கும் கிடைக்காத நீ..
பணமென்ற பெயரில்
பாடுபடுத்துகிறாய்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக