எங்கிருந்து
வந்தது அந்த
வெட்கம்.......?
எதற்காக
வந்தது அந்த
தயக்கம்.......?
எப்படி
வந்தது அந்த
கிறக்கம்.......?
நீ வார்த்தையால் சொல்லும்
செய்திகளை
விட
கண்களால்
கூறும் சங்கதிகள்
எளிதில்
என்னை தீண்டுகிறது..
வானத்தில்
பாடித்திரியும்
வானம்பாடி
வானத்தை
தனக்கு மட்டுமே
சொந்தங்கொள்வதில்லை..
நீருக்குள்
துள்ளித்திரியும்
மீன்கள்
தனக்காக
எதையும்
சேர்ப்பதில்லை..
வானத்து
சூரியன்
பூமியின்
மலர்களை
தன்னை
நோக்கி கவர்கிறது..
நானும்
எங்கே இருந்தாலும்
என்றும்
உன்னையே
நினைத்துக்கொண்டு
அலைகிறேன்..
உன்னில்
வேர்கொண்ட
என்னின்
நினைவுகள்
இன்று...
பெரும்
விருட்சமாய்..
இது
வெட்ட வெட்ட வளரும்
காதல்
விருட்சம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக