புதன், 3 பிப்ரவரி, 2016

பூவும் பொட்டும்


பூவும் பொட்டும் பெண்களின்
பிறப்புரிமையாய் இருக்கையிலே
அதை
ஆண்கள் சார்த்து மாற்றிய
மடமையை செய்தது எது?
பூரண சந்திரனாய்
ஜொலிக்க வைக்கும்
நெற்றித்திலகமும்
வண்ணமிகு
வாச மலர்கள்
அலங்கரிக்கும் கார்கூந்தலும்
திருமண பந்தத்தில் வருவதில்லையே?
பின் கணவன் மறைவில்
ஏன் அது
காணமல் போக வேண்டும்.....?
காலங்கள் மாறியும்
இன்னும் ஏன் இந்த கொடும்பழக்கத்தை
மாற்ற துணிச்சல் இல்லை...
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?”
கேட்டுவைத்தான் புரட்சிக்கவி
இன்னும் பேதமையில்
மூழ்கி நல்பெண்நெஞ்சை

கொல்லுதல் தான் சரியோ?

கருத்துகள் இல்லை: