கூடு விட்டு நீங்கி
வெறும்
கூடாகிப் போனாலும்..
பூமிமீது வாழ்ந்தது போதுமென்று
பூமிக்குள்ளே போனாலும்
எங்கும் விட்டுப்போகாது
ஒன்றாய் தொடரும்....
உண்மைகாதல் கொண்டதால்
உயிர் பிரிந்த கூட்டிலும்
இக்கூட்டை விடாது
கூடுகள் போனால் என்ன
அன்பு கூடுதலும்
அன்பு கூட்டுதலும்
என்றும் பிரியாதே.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக