அன்பாயுதம்...
பேச்சுக்கள் தோல்வி கண்டது
நேசங்கள் காணாமல் போனது
ஈரமில்லா மனதில் இரக்கம் மாண்டு போனது
புன்னகைப்பூக்கள் வாடி
வதங்கிக்கிடக்கிறது
மனங்களோ அன்பிலா பாலைவனமாய்
வறண்டுவிட்டது
சுயநலங்கள் நெருஞ்சியாய் பாதைகள்
எல்லாம்..
பகட்டுகளும் வேடங்களும் பதவிகளில்..
வாழ்க்கையில் அங்கமாய் இருந்த பணமோ..
வாழ்க்கையாய் போய்விட்டது...
அதோ..
மூலையில் கிடக்கிறது...
முனை மழுங்கிய “அன்பாயுதம்”
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக