புதன், 12 அக்டோபர், 2016

பெண்களை தெய்வமாக வணங்குவது ஏன்.?

பெண்களை தெய்வமாக வணங்குவது ஏன்.?

பதில் ரொம்ப எளிது.. எல்லாம் ஆக்கிய ஆண்களின் சுயநலம்.

ஆதி சக்தியாய் தோன்றிய பெண்மை ஆதிக்கத்தில் இருந்தது.

மெல்ல மெல்ல சக்திக்குள்ளே மும்மூர்த்திகள் அடக்கம் என்று சொல்லி சக்தியை மறைத்து வைத்தான்.

ஆகங்கார ரூபமாய் இருக்கும் அந்த சக்தியை அன்னை என்ற பதவி தந்து அமைதி ஆக்கினான்.

மண்ணின் மேலே ஆளுகை பெற்றிருந்த பெண்களை மெல்ல மெல்ல தெய்வம் நீ, தழைக்க வந்த கோமகள்.. அன்பின் இருப்பிடம், அமைதியின் உறைவிடம், ஆண்களின் புகலிடம், இருளகற்றும் குலவிளக்கு என்ற கற்பிதங்கள் சொல்லி அவளின் ஆளுமையை தந்திரமாய் அடக்கியே வைத்து விட்டது இந்த சமூகமும் அதை செதுக்கிய ஆண்குலமும்...

பேதைப்பெண்கள்.. புகழ்ச்சியில் மயங்கி, உச்சி குளிர்ந்து, உண்மை மறந்து சக்தி, இருப்பு துறந்து இருட்டடியில் தெய்வம் தாமென, சக்தி தாமென, எல்லாம் தாமென அறியாது அடங்கி கிடந்தது..

ஆங்காங்கே பற்றிய சிறுபொறிகள் இன்றைக்கு பெண்கள் தாங்கள் யார் என்பதை உணரவைத்து வெளிப்படுத்த வைத்துள்ளது..

ஆக.. இதுவரை பெண்களை தெய்வம் என்று பொத்தி வைத்தது போதும்..

அவர்களை சக மனுஷியாய், நல்ல தோழியாய், அன்புள்ளம் கொண்ட தாயாய் போற்றுவோம்.


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: