வெண்மேகம் இல்லாத இருண்ட வானத்தில்
பூப்போல பூத்ததடி நட்சத்திரங்கள்..- எல்லாம்
உன் புன்னகைக்கு ஈடாகுமா?
மௌனத்தை மொழியாக்கி கொல்லுகிறாய்
என் நினைவுகளில் உன்நினைவை
கூட்டுகிறாய்..
நிலாக்கால இரவுகளும் தென்றல் தழுவும்
சோலைகளும்
சொல்லிடுதே நீ அணைத்த நாட்களை தான்..
என் மனதும் ஏங்கிடுதே ஊடல் போகும்
இரவைதான்..
அந்நாளில் நீ தந்த அன்பு முத்தங்களும்
ஆசையோடு அணைத்துக்கொண்டு தலை கோதிய
இனிமைகளும்
அன்பாலே நீ அடிக்க தங்கிவிடும் மனது..
வம்பாலே அடிக்காதே நொறுங்குதடி மனசு..
என் விழியை உன் விழியில் கலந்துவிடு
கண்ணே..
மௌனத்தை உடைந்து விட்டு வார்த்தை ஒன்று
சொல்லிவிடு..
ஊடலிலே தொலைத்துவிடும் கோபம் தானே..
கூடலிலே வந்துவிடும் நாணம் தானே..
அழகில்ல கோபத்துக்கு விடை கொடுத்து
நாணத்தில் சிரித்துவிடு..
முழுநிலவாய் நாணத்தோடு வந்துவிடு..
அந்த நீலவான ஆடை மெல்ல தள்ளிவிடு..
தளிர்மேனி குளிர்கரங்கள் அணைக்கட்டுமே..
இதழ்கள் சேர்ந்து புதுகவிதை
படிக்கட்டுமே..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக