கொஞ்சுவது சினம்.
ஈரடியால் உலகளந்த வள்ளுவனும்
மூன்றடியில் தேவர் காத்த வாமனனும்
நான்கடியில் உண்மை சொன்ன நாலடியாரும்..
ஒன்றாகி சொல்லுவது ஒரு நீதியே..
சினம் தவிர்த்தல் ஒன்றே நன்மக்கள்
கொள்ளும் நீதி..
மதித்து நடப்பாரும் சரி..
மதியாதார் செயலும் கூட சரி..
நடப்பது நடந்துவிடும்..
அற்ப ஈயும் நம்தலையில்
நார்த்தனமாடும்..
செயல்தடுக்க ஏலாது நம்மாலே..
உணர்ந்தாலே சினம் நம் தலைக்குள்
இறங்காது..
அஃதே..
காவாத சினமேன்றால் நம்மையே கொல்லும்..
புரிந்தோரே வார்த்தைகளை சிறையிட்டு..
சிந்தித்து வெளியிடுவர்..
நன்மக்கள் நாமாவோம்....
வாலிபத்தின் புலனடக்கம் போல்தானே
நல்லோர் மனதடக்கும் சினமும்....
புன்னகையால் சினம் வென்று
பொறுமை காத்தால்...
ஆத்திரத்தில் அறிவிழந்து சதை கௌவும் நாய்
தானே..
யார் இங்கே திருப்பியதை கௌவுவது..
இல்லையன்றோ....
சினம் கொண்டு சீரின்றி வார்த்தை
சொல்லும்
புல்லோரை நாம் தவிர்த்து – நம்முடைய
நாவடிக்கி ஒதுங்கி செல்லுதலே இழிவல்ல....
இவ்வுலகில் சினமடக்கி கொஞ்சுவதும்
சிறப்பே..
(கருத்துக்கள் – நாலடியார் – சினம்
இன்மை)
சங்கர் நீதிமாணிக்கம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக