அன்பாயுதம்..
“ஆடி” காரும் ஆடம்பர வீடும் இல்லை..
கேட்கிறது எல்லாம் வாங்கி தர
காசும் நெறைய இல்லை..
ஓட்டை குடிசையும் வாட்டும் வறுமையும்
தான்
அங்கிருப்பது இங்கில்லை தான்..
தனிமை இங்கில்லை
பிரிவு இங்கில்லை
வெறுமை இங்கில்லை
வேஷம் இங்கில்லை
ஆனா.. அங்க முக்கியமா இல்லாதது
இங்க வஞ்சனை இல்லாம இருக்கு..
நேசம் இருக்கு
பாசம் இருக்கு
பகிர்தல் இருக்கு
அணைப்பு இருக்கு
நிம்மதி இருக்கு
எல்லாத்துக்கும் மேல அன்பு குறையாம
இருக்கு
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக