பூவுக்குள்
ஒளிந்திருக்கும் பூகம்பமாய்..
கோபத்தை
கேடயமாக்கி..
வார்த்தை
என்னும் வாள்வீச்சில்
நயவஞ்சக
நரிகள் கூட்டம் நெருங்கிடாமல்
தனை
கத்துக்கொள்வாள் பெண்..
புன்னகையை
ஆயுதமாக்கி
மௌனத்தை
கேடயமாக்கி
எதிர்த்து
வரும் பகைகளை..
வெல்லாமல்
வென்று கடப்பவர் சிலர்..
சிலரோ
வார்த்தையற்ற
மௌனத்தை கூராயுதமாக்கி
கண்மொழி
கடுமையை கேடயமாக்கி
களத்தை
கட்டுப்படுத்துவர்...
நம்
வாழ்க்கை போர்க்களத்தில்
நம்பிக்கை
நம் கைவாளாய்
நின்று
சுழல...
அறிவு
கேடயமாய்
எதிர்வாளை
சுழன்று தடுத்து காக்கும்..
இடையாடை
கட்டிய
பொக்கை
கிழவனோ..
அகிம்சையை
ஆயுதமாக்கி
எதிர்வந்த
முரட்டுக்கூட்டத்தை
மேனி
நடுங்கச்செய்து..
பட்டினியை
கேடயமாக்கி
பாய்ந்த
வல்லூறுகளை பின்வாங்க செய்த
வரலாறும்
கண்முன்னே கண்டதுதானே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக