வறுமையின்
பிடியில் நின்று
வாடிடும்
கண்களே..
வாழ்க்கையின்
ஓட்டத்தில் அணைபோட
வறுமை
சுவர் வலியது இல்லை..
மனதின்
எண்ணத்தில் கூர் தீட்டி
உழைப்பினில்
குலையாத உறுதி கூட்டி
வறுமைக்கு
மயங்கிடாமல்
வீறுகொண்டு
நடைபோடு..
பாலையிலும்
பூக்கும் சோலைகள் உண்டு..
முட்கள்
நிறைந்தாலும் பாதைகள் நமக்குண்டு..
பாடங்கள்
படிக்க உனக்கும் இடமுண்டு..
பாதைகள்
வகுக்க உனக்கும் திறமுண்டு..
எட்டா
கனவுகள் அல்ல
நீ
ஏங்கி நிற்கும் வசதிகள் ...
ஒட்டிப்பிறந்த
நகமும் சதையுமல்ல
நீ
கொண்டிருக்கும் வறுமையும் ஏக்கமும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக