காடில்லா மனிதக்காட்டில்
நான்
மரங்களை
தேடுகிறேன்..
வழியிலோ
வீடில்ல கூரையில்...
நட்சத்திர
பூங்கா..
மெல்ல
நடக்கையில் என்னுடன்
சேர்ந்து
நடந்தது நிலா..
கண்மூடி
நிதானிக்கையில் மெல்ல
இருளானது
உலகு..
துணையின்றி
நிற்கும்
ஒற்றை
மரமாய்..
இரவுக்காட்டில்
என் பயணம்..
துயரத்தை வாள்கொண்டு
அறுக்கையில்
அங்கே
துணையாய்
ஒரு துயரம் புன்னகைக்கிறது
காற்றில்லா
திசையில்
என்
இறக்கைகள் அடிக்க..
மொழியில்லா
வார்த்தைகள்
துயரங்களை மௌனமாய்
சொல்கிறது..
விழிகொண்ட
குருடனாய்
நான்
தடுமாறி நடக்கையில்
முடமான
பாதைகளில்
என் தடம்
மாறி போகிறது...
அழுக்கடைந்த
தேகத்தின்
வியர்வை நாற்றத்தில்.....
வசதி சட்டைகள்
அரியாசனம் ஏறுகிறது..
ஏகாந்த
வெளியெங்கும்
கூப்பாடு
சத்தம்..
உண்மையோ..
ஓரமாய்
நின்று வேடிக்கை பார்க்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக