வியாழன், 9 ஜூன், 2016

காத்திருக்க பழகு வாழப்பழகுவாய்



விதை போட்டேன்...
ஆழ விதை போட்டேன்..
காத்திருந்தேன்..
பூமி பிளந்து வீரியமாய் வந்தது.செடி..
காத்திருந்தேன்..
தேவைக்கு நீரூற்றி...
தேவைக்கு உரமளித்து...
தேவையான நேரத்தில் களைபறித்து...
காத்திருந்தேன்..
அரும்புகள் தலை காட்ட..
உள்ளத்தில் மகிழ்ச்சி..
அவசர படவில்லை..
காத்திருந்தேன்....
மெல்ல மலர்ந்து பூக்கள் சிரிக்கையில்
மனதில் நானும் பூத்தேன்.....
பூக்களுடன் காத்திருந்தேன்..
மெல்ல பூக்கள் கொண்ட சூலில்...
காய்கள் பிறக்க..
குதூகலித மனதோடு காத்திருந்தேன்...
மெல்ல வாடிய பூக்கள் உதிர ஆரம்பிக்க...
என்னில் வருத்தமில்லை..
என் காத்திருப்பு
சிறு தவமாய் இன்னும் தொடர்ந்தது...
காய்கள் திடம் கொள்ள...
காத்திருப்பின் பலனை நோக்கி காத்திருக்க...
காலம் மெல்ல மெல்ல கனிய..
காயும் மெல்ல மெல்ல கனியாகியது...
காத்திருப்பின் தவம் கனியாகியது..
காத்திருப்பு..
கற்றுக்கொடுத்தது..
அவரசம் எல்லாவற்றிலும் வெல்லாது..
காத்திருப்பு..
பொறுமையை சொல்லியது..
அழகான வளர்ச்சியை சொல்லியது..
ஆரோக்கியமான செழிப்பை சொல்லியது..
சுவையான பலனை சொல்லியது..
காத்திருக்க பழகினேன் பொறுமையுடன்..
வாழ்க்கையின் இனிமையை அதில் தெரிந்து..
வாழ்கையை வாழப்பழகினேன்....

கருத்துகள் இல்லை: