சாதிக்கும்
லட்சிய பெண்ணடி நீ..
வாய்ப்பூட்டு
சமுதாயத்திலும் நீ
மௌன சாட்சியாய்
குடும்பத்தின் ஒற்றுமைக்கென
வாழ்ந்து வளம்
சேர்த்தாய்..
உன்னை
கட்டுக்குள் வைத்து
அடிமையாய்
நடத்திய சமூகத்தின்
கட்டுக்களை
பொறுமை ஆயுதத்தால்
மெல்ல மெல்ல
அறுத்தெரிந்தாய்...
நூற்றண்டு
கனவுகளை கண்களில் தேக்கி
தடைகளை தாண்டி
தொடங்கிய உன் பயணம்
இன்னும் முற்று
பெறாமல்...
முள்ளின்
பாதைகளையும்
தீயின்
வார்த்தைகளையும்
அமிலத்தின்
மழைகளையும்
வென்று உன்
பயணத்தை தொடரும்
நீ லட்சிய
பெண்ணே..
ஒப்பீட்டு
அளவில் உன் விடுதலையாய்
இன்றைய
முன்னேற்றங்கள் என்று சொன்னாலும்
கண்ணுக்குத்தெரியாத
பிணைகள்
இன்னும்
கூட்டுக்குள் அடைக்க முயற்சிக்கிறது....
சாதனைகள்
பலவற்றில் சிகரம் தொட்டுவிட்டாய்..
அந்த சாதனைப்
பயணங்கள்
வாழ்த்து
சொல்லுதடி
நீ லட்சியப்
பெண்ணென்று..
உன் சாதனைகள்
எல்லாம்
அன்பெனும்
இழையில் எல்லோரையும்
அணைத்தே
செல்லட்டும்.....
உன் தொடரும்
முன்னேற்றப்பயணம்
காட்டாற்று
வெள்ளத்தின் வேகமாய் இல்லாமல்
மெல்ல அணைத்து
புன்னகைக்கும் வசந்தகாலத்தின்
இனிமையாய் தொடரட்டும்..
இனிமையாய் தொடரட்டும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக