எத்திக்காகிலும்...
எங்காகிலும்...
யாருமில்லா
அடர்வனமாகிலும்..
கூரையில்ல
கோபுரமாகிலும்..
எங்கோ ஒரு
மூலையாக..
மலை
முகடாக..
கடற்கரை
மணல்வெளியாக..
மெல்ல
கால்கள் முத்தமிட்டு
பாறை
இடைவெளியில் தாலாட்டுபாடி
புள்ளினங்கள்
தலைநீட்டும்
மலைக்காட்டு
ஆற்றங்கரை...
கலை
சொல்லும் கோவில் மண்டபம்..
கனவு சொல்லும்
திரையரங்கம்..
நட்பு
கூடும் எங்கெங்கும்..
உறவுகள்
கூடும் வெளி எங்கும்..
என் உள்ளம்
தேடுமே..
அமைதியான
நிலவிடையே..
ஆர்ப்பரிக்கும்
அருவியென..
கூடும்
உறவுகளின் சங்கமமே
நான் போக
விரும்பம்
ஓரிடம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக