மரியாதையின் வேர் எது..
மனமா? செயலா?
செயலில் என்றால் போலித்தன்மை இருக்கும்..
மனமே மரியாதையின் வேர்..
சிலர் அறியார் எனினும்
பேச்சில், செயலில்
கூழைகும்பிடு போட்டு
போலி மரியாதையில் வெளுத்து வாங்குவர்..
மயங்கி முகம் மலர்ந்து விட்டால்..
அந்த நபருக்கு ஒரு ஏமாளி கிடைத்தான்..
போலி வார்த்தைகளும்..
போலி புகழுரைகளும்
போலி முகமன்களும்
நிறைந்திருக்கும் நாளிது..
இயல்பான செயலில் என்றும் இருப்போம்..
மரியாதை தேடி செல்ல வேண்டாம்..
மரியாதையை அள்ளி தருவோம்
அதுவே மனம் கொள்ளா அளவு
திரும்பி வரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக