ஆறறிவு மிருகத்தை
சீராக்கி
ஐந்தறிவின்
மேம்பட்ட
மானுடமாய்
மண்ணின் மேல் உலவவிட்டது
கல்வி..
கோவில் படிகளிலும்
திண்ணை வெளிகளிலும்..
தேங்கி தவித்திட்ட
கல்வி..
படிக்காத
மேதை
க்ண்பட்டுத்
தமிழகத்தில்
தழைதோங்கி
செழித்திட்ட
மாண்புடைய
கல்வி..
எட்டாதோர்க்கும்
ஏழை பாழையென்று
ஒதுக்கி
கிட்டாதோர்க்கும்
கிடைத்திட்ட
கல்வி...
சமமென்று
எல்லொரும்
சடுதியில்
உணரவைத்து
சாதிகளுக்கு
சவுக்கடி
தந்து
கொஞ்சம் சந்தோசப்பட்ட
கல்வி..
கல்வி கடைச்சரக்கல்ல
காசுள்ளோர்
மட்டும்
பெறவென்ற
கூற்றைப்
பொய்யாக்கி
கூவி
விற்கப்படுதின்று
கல்வி..
இன்று..
தாயில்லா "செல்வ"பிள்ளையாகி
பகட்டுகளின்
கைசிக்கி
பரிதவிக்குது
எளியோர்க்கும்
ஏற்றந்தந்த
எம்
கல்வி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக