நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
வெள்ளி, 2 டிசம்பர், 2011
புதன், 9 நவம்பர், 2011
வியாழன், 3 நவம்பர், 2011
வெள்ளி, 28 அக்டோபர், 2011
கேள்விக்குறி
கேள்விக்குறியாய்
அமைந்த காலம்
எதிர்காலம்.....!
வேலையில்லா
இளைஞர்களின்
எதிர்காலம் -
தண்டச்சோறு
பட்டத்துடன்.....
கேள்விக்குறி....?
வரதட்சணை
பணமில்லா பெண்ணின்
எதிர்காலம் -
வீணாய் கழிவதுடன்....
கேள்விக்குறி....?
ஏறும் விலைவாசியில்
நடுத்தரவர்க்கத்தின்
எதிர்காலம் -
சமாளிக்கும்
பயத்துடன்....
கேள்விக்குறி...?
தேர்தலில்
அரசியல்வாதிகளின்
எதிர்காலம் -
வெற்றி வாய்ப்பு
தவிப்புடன்....
கேள்விக்குறி.....?
கேள்விக்குறியாய்
அமைந்த காலம்
எதிர்காலம்.....!
வியப்பிற்குறியது....!
வேதனைக்குறியது....!
கெள்விக்குறி
மறைய உழைக்கத்
தூண்டுவது....
மேகம்
இவ்வளவு நாள்
நீ அழுது
எங்களை
மகிழச்செய்தாய்....
இப்பொழுதோ
உன் சிரிப்பை
விண்மீனாய்...
எங்களை
கண்ணீர் வடிக்க
வைக்கிறாய்....
எங்கள் கண்ணீரில்
என்ன பலனை
நீ
காண்கிறாய்.....?
உன் கண்ணீரோ
எங்களின்
துக்கத்தை
தீர்க்கிறது.....
இப்பாரினில்
பசுமை புரட்சிக்கு
வித்திட்டு
உதவுகிறது....
உபயோகமில்லா
எங்களின்
கண்ணீரை நிறுத்தி....
மேகமே
நீ
கண்ணீர்
விடு....
கோழையா நான்?
கொடையாளியாக
இருக்க
விரும்பினேன்
கொடுக்க
பணமில்லை.....
கொலையாளியாக
மாற
நினைத்தேன்
செய்ய
தைரியமில்லை.....
யாசகம்
பெற
யோசித்தேன்
மானமெனைத்
தடுத்தது.....
மறக்க
முயற்சி
செய்தேன்
மறக்க
முடியவில்லை....
தற்கொலை
செய்துகொள்ள
எண்ணினேன்
அவ்வளவு
கோழையா
நான்.....?
திருந்துவார்களா?
ரோஜா இதழென
இருந்த அவள்
இன்று
வரதட்சணை என்னும்
சூறாவளியால்
வாடுகிறாள்
இச்சூறாவளி சென்ற
இடமெல்லாம்
ஸ்டவ் வெடிக்கிறது
மருமகள்
கொளுத்தும் போது
மட்டும்....
ஏன் அது
மருமகள்
கொளுத்தும் போது
மட்டும்....
அவளின் விலையில்லா
உயிரை
விலையாகப்
பெற்று
மற்றவர் பற்றி
எண்ணாமல்.....
இக்கொடுமைகள்
அனைத்தும்
நம்
பாரத மண்ணின்
சாபமா?
துணை புரிவாய்
தமிழே.....!
தரணியில்
தழைத்தோங்கும்
தேனாறே...
வெள்ளத்தின்
ஓட்டம் போல்
பெருக்கெடுத்து
செல்லவும்....
எண்ணிலா
மழைத்துளிகள் போல்
என்றுமில்லா
இனிமையுடன்
இறையவும்...
என் மனதில்
தென்றலென
இனிமையுடன்
வந்து...
கவிதை எனும்
கற்கண்டை
காண
துணைபுரிவாய்...
விடை என்ன?
ஏ.. நெருப்பே ..
ஏன்
எரிக்கிறாய்?
ஏதும் அறியா
அப்பாவி
பெண்களை.....
மாமியார்
கணவர்
அருகே நிற்க
மருமகளை
மட்டும்
ஏன்
எறிக்கிறாய்?
ஓ.. மண்ணெண்ணெய்
லஞ்சம்
மயக்கி
விட்டதா உன்னை?
காலை
கதிரவனுடைய
வரவைக் கொண்டு
இருளை விரட்டி
விடியற்காலை
பறவைகள் இன்பமாய்
கூவிட
உறங்கும் மாந்தர்
சுகமாய் எழுந்து
தமது கடமை ஆற்றிட
களைப்பை போக்கி
கவலைகள் மறந்து
கவினழகு கான
காலையே...!
வருக....
மனநிறைவு
ஓ.. மலரே ...!
உயிர் பிரிகிறதே
என் ஏக்கமா?
பரவாயில்லை
மனநிறைவு கொள்....
சில நிமிடங்கள்
சிந்தனை செய்
காரணம் தெரியும் ...
உந்தன் உயிரின்
இறுதி மூச்சு
இனிய மணமாய் ...
மக்கள் மனம்
மகிழச் செய்கிறது ....
மனநிறைவு கொள்
வியாழன், 27 அக்டோபர், 2011
எழுவோம்
இல்லாதவனுக்கு
இளகிய மனது
இருப்பவனுக்கு
இரும்பு மனது
கொடுக்க மனமிலா
செல்வனுக்கு
கோடி கோடியாய்
சொத்து
உழைத்து வாழும்
ஏழையோ
வானமே கூரையாய்
வாழ்கிறான்
சுதந்திர நாட்டில்
அடிமையாய்
சோர்ந்து கிடக்கும்
ஏழை மனிதனின்
அடிமைத் தளையை
அறுத்து எறிந்திட
ஆறுதல் செய்து
அவர்களை தேற்றிட
செல்வனின் அகந்தை
நெருப்பு அழிந்திட
அருவிபோல் பாய்ந்து
அனைவரும் எழுவோம்
செவ்வாய், 25 அக்டோபர், 2011
பயன் என்ன ?
விவேகம் இல்லா
விஞ்ஞானம்
ஆபத்திற்கு உதவா
பிள்ளை
அரும்பசிக்கு உதவா
அன்னம்
தாகத்தைத் தீரா
தண்ணீர்
தரித்திரம் அறியாப்
பெண்டீர்
பாவத்தைத் தீரா
தீர்த்தம்
கோபத்தை அடக்கா
அரசன்
குருமொழி கொள்ளாச்
சீடன்
அருவிபோல் எழுவோம்
இல்லாதவனுக்கு
இளகிய மனது
இருப்பவனுக்கு
இரும்பு மனது
கொடுக்க மனமிலா
செல்வனுக்கு
கோடி கோடியாய்
சொத்து
உழைத்து வாழும்
ஏழையோ
வானமே கூரையாய்
வாழ்கிறான்
சுதந்திர நாட்டில்
அடிமையாய்
சோர்ந்து கிடக்கும்
ஏழை மனிதனின்
அடிமைத் தளையை
அறுத்து எறிந்திட
ஆறுதல் செய்து
அவர்களை தேற்றிட
செல்வனின் அகந்தை
நெருப்பு அழிந்திட
அருவிபோல் பாய்ந்து
அனைவரும் எழுவோம்
அறிஞர் அண்ணா
அச்சம் தவிர்த்திடுக
நவநிதியம் தந்திடினும்
நந்திக் கிடக்க
இசையாதீர்
வாய்மைதனைக்
காத்திடும் வன்மை
பெற்றிடுக
அதற்காக
நெருப்பாற்றில்
நீந்திடவும்
துணிந்திடுக
சனி, 22 அக்டோபர், 2011
வெள்ளி, 21 அக்டோபர், 2011
தமிழின் நீதி நூல் வரிகள்
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்: ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கதனை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
வருந்தி அழைத்தலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா இருந்தோங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
அனைத்து வரிகளும் தமிழின் நீதி நூல்கலிள் இருந்து எடுத்த மிகப் பிரபலமான நீதி வரிகளாகும்
நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலனக் கலகலெனப் புதல்வர்களைப் பெருவீர்
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலனக் கலகலெனப் புதல்வர்களைப் பெருவீர்
காப்பதற்கும் வழியறீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே!
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே!
அனைத்து வரிகளும் தமிழின் நீதி நூல்கலிள் இருந்து எடுத்த மிகப் பிரபலமான நீதி வரிகளாகும்
நன்றியுடன்
சங்கர்
காதல்
காத்திருந்தேன் நான்
உன்னைப் பார்த்திடவே
நேரம் கறைந்தது எப்படி
என்றே தெரியவில்லை!
நேற்றிருந்த கோலமின்று
மாறியது!
காதலியே மனைவியானால்!
இன்றோ சூழ்நிலைகள்
மாறவில்லை!
ஆனாலும் காத்திருக்க
முடியவில்லை
ஏனெனில்
நேரமோ எனதில்லை.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
பிறந்த ஊர்
ஏனோ தெரியவில்லை
துள்ளி விளையாடிய இடந்தான்
மூலை முடுக்கெல்லாம்
அத்துப்படி தான்
இருந்தாலும் தெரியவில்லை
மனதங்கே ஒட்டவிலை !
பிழைப்பிற்காக வேரோடு
வந்ததாலா?
உற்றதுணை, கற்றதுணை
எல்லாம் இருந்தாலும்
இரத்ததுணை இல்லாமல்
போனதாலா?
பிறந்து வளர்ந்த இடம்
நாற்றுக்கேது சொந்தம் ?
பிழைக்க பெயர்ந்த பின்பு
மண்ணுக்கு என்ன பந்தம்!!
அந்த நாட்கள்
திரும்ப வருமா அந்த
இனிய நாட்கள் !
கவலைகள் ஏதுமின்றி
காற்றைப் போல
சுற்றித்திரிந்த அந்த
கனவு நாட்கள் !
விலைவாசி ஏறினாலும்
குறையாது விளையாட்டு !
வயிற்றுக்கே இல்லையாயினும்
வறுமை தெரியாது !
கட்டில் எதற்கு
கட்டாந்தரை தொட்டில் இருக்க !
எண்ணச் சிதைவில்லை
ஏமாற்றத் தேவையில்லை !
வண்ணமாய் உடுத்தினோம்
உண்ணாமல் சுகங்கண்டோம் !
வாழ்க்கை வாழ்வதற்கே என்று
வாழ்ந்து தீர்த்து விட்டோம் !
இறந்து போன நாட்களின்
கனவுகளாய் மாறின எல்லாமே !
இளஞ்சூரியன் உச்சிக்கு வந்து
சுட்டது போலானது எல்லாம் !
அந்தக்காலம் இறந்து போனது
மிஞ்சியது நிழலான நினைவுகளே !
நிகழ்காலத்தை விட இறந்தகாலம்
இனிமையானது தான் !
ஏனென்றால் அது திரும்பி
வராதது என்பதாலோ !
திரும்ப வருமா அந்த
இனிய நாட்கள் !
என் வரிகள்
உள்ளத்தில் சோகம்
உதட்டில் புன்னகை
இதுதான் மனித வாழ்க்கை
ஏன் மனிதா !
ஏனிந்த ஆட்டம்
எண்ணக்கூடிய நாட்களே
உன் வாழ்க்கை......
நீ செய்தது என்ன?
நெஞ்சில் வஞ்சத்தோடு
கண்ணில் குரோதத்தோடு
எல்லாம் உனது என்ற
எண்ணத்தோடு
நீ ஆடும் ஆட்டம் எதற்கு?
புதைத்தால் புல் முளைக்க
மறையும் உன் நினைவு!
எரித்தால் சாம்பல் ஆகி
கறையும் உன் கனவு!
இருக்கும் காலத்தில்
நீ விட்டுக்கொடு.....
நீ இறந்த பின்னே
உலகம் உனக்கு கொடுக்கும்
நற்புகழை!
சனி, 3 செப்டம்பர், 2011
அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் ஒரு பாடல்
ஆவீன மழைபொழிய இல்லம்வீழ
அகத்தடியால் மெய்நோக அடிமை சாக
மாவீரம் காயுமென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துகொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!
ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துயர அனுபவமாம் - கற்பனை தான் !
1. பசு கன்றீன்றது
2. அடை மழை பெய்தது
3. வீடு இடிந்து விழுந்தது
4. மனைவிக்கு நோய்
5.வேலைக்காரன் செத்தானாம்
6. வயல் ஈரம் காயும் முன் விதைக்க ஓடினான்
7. வழியில் கடன்காரன் மடக்கினானாம்
8. எதிரே சாவு செய்தி வந்ததாம்
9. அப்போது எதிர்பாராது விருந்தாளிகள் வந்தார்களாம்
10.அவனையே சர்ப்பம் தீண்டி விட்டதாம்
11.அதிகாரிகள் நிலவரிக்கு வந்தார்களாம்
12.அப்போது குருக்கள் தட்சணை கொடு என்றாராம்
பாவம் எவ்வளவு துயரம் ஒருவனுக்கு. என்ன செய்வான். சிரிப்பதை தவிர
- அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் படித்தது.
நன்றியுடன் நீ. சங்கர்
வெள்ளி, 2 செப்டம்பர், 2011
திருக்குறளின் பெருமைகள்
உலகத்திருமறையை உவகையுடன் படிப்பவர்க்கு
உணர்வதனைதுமே நீதியே !
உள்ளதில் உண்மைகள் மலர்வதற்கு
உரிய பெட்டகமே திருக்குறளே !
தினம் தினம் திரித்து கூறுவோரும்
திருக்குறளை படித்தாரானால் - நீதியின்
திசைநோக்கி நிச்சயம் நடந்திடுவர்
திரித்தது தவறென திருந்தியும் வாழ்ந்திடுவர் !
அன்னை தந்தை கடவுளென
அனைவர்க்கும் கூருகிறார் ஆதியிலே !
அறம்பொருளே இன்பமென
அனைத்தையும் கூருகிறார் மீதியிலே !
கூறியுள்ள குறலனைத்தும் குன்றாத
குணக்குன்றாய் கூறுவதும் நீதிகளே !
குணத்தில் உயர்ந்தோரை குலதில் சிறந்தோரை
கோமகனாய் காட்டுகிறார் சாதியிலே !
தனித்திருந்தால் தவசியென்றும்
விழித்திருந்தால் வீரனென்றும்
பசித்திருந்தால் பண்பாளனென்றும்
பலநீதி கூறுகிறார் திருமறையில் !
இனிய சொல்லை எடுத்தாண்டு
வலிய சொல்லை வழக்கொழித்து
புதிய சொல்லை உலகளித்து
புதுவுலகம் காணுகிறார் பொதுமறையில் !
தீமையில்லா வாய்மை வேண்டும்
தீதுயில்லா செய்கை வேண்டும்
வன்மையில்ல வாழ்க்கை வேண்டும்
வறியவர்க்கு வழங்க வேண்டும் !
அடக்கத்துடன் வாழ வேண்டும்
ஆன்றோறை ஒழுக வேண்டும்
ஒழுக்கத்தினால் மேன்மை வேண்டும்
உள்ளத்தில் உயர்வு வேண்டும் !
நன்றி மறவாமல் வாழவேண்டும்
நன்றல்லதை அன்றே மறக்க வேண்டும்
நல்ல நூல்களையே படிக்க வேண்டும்
நல்லறமே இல்லறத்தில் சிறக்க வேண்டும் !
முறைசெய்து காப்பாற்றும் மன்னன் வேண்டும்
முறையற்ற மாக்களை களைய வேண்டும்
முறையானவழியில் முந்த வேண்டும்
முன்னோர் வாக்கினை காக்க வேண்டும் !
மனைதக்க மனைவி அமைய வேண்டும்
மகனுக்கு தந்தை வழிகாட்ட வேண்டும்
தந்தைக்கு தவமகனாய் அமையவேண்டும்
தன்மானம் உள்ளவனாய் வாழ வேண்டும் !
பொய்யாமையற்று வாழ வேண்டும்
புகழ்பெறவே பிறவி அமையவேண்டும்
புழுக்கமில்ல மனம் இருக்க வேண்டும்
புள்ளறிவாளர் நட்பை விளக்க வேண்டும் !
உலகத்தோடு உவந்து வாழ வேண்டும்
உண்மையுடன் உபதேசம் செய்யவேண்டும்
உழவர்க்கே முன்னுரிமை வழங்க வேண்டும்
ஊருக்கு பழுமரமாய் உதவ வேண்டும் !
இல்லிக்கும் மல்லிக்கும் சொல்லிற்கும்
அரசர்க்கும் அமைச்சர்க்கும்
அனைவர்க்கும் அடுக்கடுக்காய் நீதிகளை
அழகுபட கூறுகிறார் திருக்குறளில் !
உலகப் பொதுமறையென
உண்மையான நீதிகளை
ஒவ்வொரு குறளிலும் எடுத்துக்கூறி
ஒளிவிளக்காய் அமைந்துள்ளது திருக்குறளே !
மேலே கூறியுள்ள வரிகள் நான் எழாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளி இலக்கியமன்றத்தில் நான் பேசுவதற்காக எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த ஆசிரியர் திரு. நாராயணன் அவர்கள் தன்னுடைய நண்பரும் என் வகுப்பு தோழன் கோபிநாதனின் தந்தை திரு. பாண்டுரங்கன் என்பவரிடம் சொல்லி எழுதி தந்தது. வருடம் 1986-1987. இவ்வளவு காலம் பாதுகாத்து இப்பொழுது வலைதளத்தில் ஏற்றியுள்ளேன். நன்றியுடன் நீ.சங்கர்
புதன், 20 ஜூலை, 2011
கணவன் மனைவி உறவு மேம்பட சில விதிகள்
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களை பேசக் கூடாது.
3. சிறிய தவறு செய்தலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தலும் பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.
5. தனிப்பட்ட விஷயங்களை பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால் சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10.'எந்நாளும் உன்னை விட்டுப் பிரியமாட்டேன்' என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.
இதை பின்பற்றினால் "To Love and to be loved is the greatest happiness of human existence" எனும் பொன்மொழி எத்தனை சத்தியம்!
அவள் விகடன் - 08.07.2011
------------------------------------------------------------------------------------------------
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' ---(A smooth sea, never made a skillfull sailor)
------------------------------------------------------------------------------------------------
புதன், 6 ஜூலை, 2011
இனிய உள்ளங்களுக்கு என் முதல் வணக்கம்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
இனிய தமிழில் எழுத நினைக்கும் எனக்கு அன்பு உள்ளங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டுகிறேன். தவறுகள் இருந்தால் அன்புடன் சுட்டிகாட்டுங்கள். நிறைகளை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
நன்றியுடன் உங்கள்
நீ. சங்கர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)