இல்லாதவனுக்கு
இளகிய மனது
இருப்பவனுக்கு
இரும்பு மனது
கொடுக்க மனமிலா
செல்வனுக்கு
கோடி கோடியாய்
சொத்து
உழைத்து வாழும்
ஏழையோ
வானமே கூரையாய்
வாழ்கிறான்
சுதந்திர நாட்டில்
அடிமையாய்
சோர்ந்து கிடக்கும்
ஏழை மனிதனின்
அடிமைத் தளையை
அறுத்து எறிந்திட
ஆறுதல் செய்து
அவர்களை தேற்றிட
செல்வனின் அகந்தை
நெருப்பு அழிந்திட
அருவிபோல் பாய்ந்து
அனைவரும் எழுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக